search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற பாராளுமன்ற தேர்தலில்  40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    கனிமொழி எம்.பி. முன்னிலையில் உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி தி.மு.க.வில் இணைந்த காட்சி. அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
    • 500-க்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் பரமன்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி மற்றும் திருச்செந்தூர் , ஓட்டப்பிடாரம் , ஸ்ரீவை குண்டம் ஆகிய பகுதி உள்ள மாற்று கட்சியினர் சுமார் 500-க்கு மேற்பட்டவர்கள் கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அப்போது தமிழக மீன்வளம் மற்றும் மீன்வள நலத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், சண்முகையா எம் . எல்.ஏ. மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக அறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டமும் தமிழக மக்களின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கிறது.

    தமிழக மக்களுக்காக அவர் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு செயல்படும் நடவடிக்கையை பார்த்து மாற்று கட்சியினர் அலை அலையாக தி.மு.க.வில் இணைந்து கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் 40 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தூத்துக்குடி எம்.பி தொகுதி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போதுஉடன்குடி பேரூராட்சி தலைவி ஹீமைரா அஸ்ஸாப் அலி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×