என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை ரெயில் நிலையத்தில் போட்டி போட்டு கோஷம் எழுப்பிய தி.மு.க.- பா.ஜனதாவினரால் பரபரப்பு
- நிகழ்ச்சியில் பங்கேற்க தி.மு.க.வினர் கட்சி கொடி ஏந்தி வந்தனர்.
- பா.ஜனதாவினர் பிரதமர் மோடி வாழ்க என கோஷம் எழுப்பினர்.
நெல்லை:
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா நெல்லை ரெயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையொட்டி நெல்லை ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன், நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் பண்ணை பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், வக்கீல் வெங்கடாஜலபதி மற்றும் தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், எம்.எல்.ஏ. அப்துல்வகாப், மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைசெயலாளர் விஜிலாசத்தியானந்த், தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க.வினர் ஏராளமானோர் கட்சி கொடி ஏந்தி வந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்., இதற்கு போட்டியாக விழா மேடை அருகே இருந்த பா.ஜனதாவினர் பிரதமர் மோடி வாழ்க எனவும் கோஷம் எழுப்பினர்.
இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து இது அரசு விழா, அரசியல் விழா அல்ல என கூறி இரு கட்சியின் தொண்டர்களையும் அந்தந்த மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அமர செய்தனர். இதைத்தொடர்ந்து விழா நடைபெற்றது.