search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. இளைஞர் அணியினர் திராவிட மாடல் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
    X

    கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.

    தி.மு.க. இளைஞர் அணியினர் திராவிட மாடல் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

    • பயிற்சி பாசறை கூட்டத்திற்கு இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.
    • அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திராவிட மாடல் பயிற்சி பாசறை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

    மாநில சுயாட்சி

    தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், அனஸ், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மனிதனை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்று கொண்டு வந்தது தான் திராவிட இயக்க வரலாறு. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி.

    இந்தி திணிப்பை அமல் படுத்துவதற்கு அமித்ஷா, ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளார். மற்ற மொழிகளை அழிக்க நினைக்கின்றனர். அது நடக்காது.

    மாநில சுயாட்சி திராவிட வரலாறு என்ன என்பதை இளைஞர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அதை புரிந்து கொண்டு 234 தொகுதிகளிலும் இது போன்ற கருத்துகளை மனதில் ஏற்றிக் கொண்டு நமக்கு எதிராக கருத்துகள் சொல்லுபவர்கள் மத்தியில் கிராமங்கள் தோறும் இளைஞர்கள் திராவிட இயக்க வரலாறை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் செல்வகுமார், பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், ரமேஷ், கோமதி, அணி அமைப்பாளர்கள் அருண்குமார், பேரின்பராஜ் லாசரஸ், ஆனந்த், வீரபாகு, துணை அமைப்பாளர்கள் ஆறுமுகம், ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், கோபால், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர்கள் பால்ராஜ், ஸ்டாலின், பரியேறும் பெருமாள், அனிட்டன், ஜெகன், கொம்பையா, மற்றும் புதுக்கோட்டை யூனியன் கவுன்சிலர் முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×