search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    178 பேரின் டிரைவர் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து
    X

    178 பேரின் டிரைவர் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து

    • சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது.
    • அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் சேலம் மாநகரில் தினமும் புதிது புதிதாக குடியிருப்புகள் முளைத்து வருகின்றன. இதனால் சேலம் மாநகரில் பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

    குறிப்பாக வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், சொந்த விஷயங்களுக்காக வாகனங்கள் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விதிமீறி வாகனங்களை இயக்கியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல் துறை சார்பில் போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்கப்படடது. அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சரக்கு வாகனங்கள்

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், குடிபோதையில் வாகன இயக்கம், அதிவேகம், மொபைல் போன் பேசியபடியே வாகன இயக்கம், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்வது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்வது, ரெட் சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற பிரிவுகளில் சிக்கும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக, நிரந்தரமாக முடக்கி வைக்க சென்னை உயர்நீதிமன்றம், சில வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதன்படி போலீசார் வழக்குகளை பதிவு செய்து, டிரைவிங் லைசென்சை தற்காலிகமாக, நிரந்தரமாக ரத்து செய்யகோரி அனுப்புகின்றனர் என, தெரிவித்தனர்.

    Next Story
    ×