என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதை பொருள் கடத்திய சரண்ராஜ், நூர்முகமது மற்றும் காரை மடக்கி பிடித்த போலீசார்.
ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் பண்ருட்டி வாலிபர்கள் 2 பேர் கைது
- சோதனையில் காரின் டிக்கியில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 188 கிலோ போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- இதன் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
காடையாம்பட்டி:
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து தர்மபுரி தொப்பூர் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருவ–தாக தீவட்டிபட்டி போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, செல்வம் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை மடக்கி பிடித்து தணிக்கை செய்தனர். சோதனையில் காரின் டிக்கியில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 188 கிலோ போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ்(35), நூர்முகமது (36) என்பது தெரிய வந்தது. அவர்கள் பெங்களூருவில் குறைந்து விலைக்கு போதை–பொருட்களை வாங்கி தமிழகத்தில் அதிகவிலைக்கு விற்பதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். காருடன் ஹான்ஸ் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.






