என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தொடர் மழையால் கொள்முதல் பணிகள் பாதிப்பு தொடர் மழையால் கொள்முதல் பணிகள் பாதிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/02/04/1831247-10.webp)
கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ள விவசாயிகள்.
தொடர் மழையால் கொள்முதல் பணிகள் பாதிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
- மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் தொடர்ந்து காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது பாபநாசம் தாலுகாவில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.
தற்போது பெய்த மழையால் நெற் கதிர்கள் வயலில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் கூறியதாவது:-
பாபநாசம் சுற்றுப்பகுதி களில் பெய்த கனமழை காரணமாக வயலில் மழைநீர் தேங்கி நிற்பதால் நெல்மணிகள் உதிர்ந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பா நெற்பயிர் அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து விழுந்து பாதிக்கப்பட்டுள்ளன.
மழை நீடித்தால் நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்பு ஏற்படுவதாகும். இதனிடையே பாபநாசம் தாலுகாவில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.
கொள்முதல் நிலைய ங்களில் விவசாயிகள் தாங்கள்கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல்தார்ப்பாய் கொண்டு மூடி
வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.