என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன
Byமாலை மலர்20 Oct 2023 2:29 PM IST
- சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.
- நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, சாலியமங்கலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கும் அபாய நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கி ன்றனர். வயலில் உள்ள நெற்கதிர்கள் சாய்ந்த நிலையில் உள்ளது.
மேலும் வயலில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழ்நிலை உள்ளதால் சாய்ந்த நெற்பயிர்களை காப்பாற்ற மழைநீரை வடிய வைத்து நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×