search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதை இல்லாததால் இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கி தூக்கி செல்லும் அவலம்
    X

    வாய்க்காலில் இறங்கி இறந்தவர் உடலை எடுத்து செல்லும் கிராமமக்கள்.

    பாதை இல்லாததால் இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கி தூக்கி செல்லும் அவலம்

    • வாய்க்கால் மற்றும் நடவு செய்திருக்கும் வயல் வழியாக இறந்தவர் உடலை எடுத்து செல்லும் நிலை.
    • இரண்டு நாட்கள் கழித்து இறுதி சடங்குகள் செய்ய வேண்டிய அவலம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், பெருங்குடி ஊராட்சியில் கடந்த 80 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் வாய்க்கால் மற்றும் நடவு செய்திருக்கும் வயல் வழியாக இறந்தவர் உடலை எடுத்து செல்லும் நிலை உள்ளது.

    இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்தவர் உடலை மழையால் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக உள்ள தால் இரண்டு நாட்கள் கழித்து இறுதி சடங்குகள் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து கிராமமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதே நிலை நீடித்தால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராமமக்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×