என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதியம்புத்தூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் - சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்
- சண்முகையா எம்.எல்.ஏ, மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் ஆகியோர் மின் நுகர்வோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
- 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என முதல் -அமைச்சர் அறிவித்துள்ளதாக எம்.எல்.ஏ தெரிவித்தார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் ராம்குமார், முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ, மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் ஆகியோர் மின் நுகர்வோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது சண்முகையா எம்.எல்.ஏ பேசியதாவது:-
தமிழக அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் உருவாக்கி அதற்கென விவசாயத் துறையும் உருவாக்கி விவசாயத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் விண்ணப்பித்து காத்திருந்தனர். விவசாயம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டன.
தற்போது மீண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் முதல் -அமைச்சர் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ரூ.4.50 கோடி செலவில் மின்சாரத்துறை உள் கட்டமைப்பை ஊக்குவிக்கும் விதத்தில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆரைக்குளம், குலசேகரநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு தனியாக மின் தொடர் அமைப்பு விரைவில் உருவாக்கப்பட உள்ளது. இதனால் இப்பகுதிகளில் தங்கு தடையின்றி மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு கிடைக்கும்.
வருகிற 31-ந் தேதிக்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். ஓட்டப்பிடாரம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் தங்கு தடையின்றி தொடர் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சண்முகையா எம்.எல்.ஏ. பேசினார்.
கூட்டத்தில் போது மின்வாரிய மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுகம், உதவி செய்ய பொறியாளர்கள் ஜெயக்குமார், முனியசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் வேலாயுதசாமி, இளையராஜா, சின்னத்துரை, உதவி பொறியாளர்கள் மணிசேகர், செந்தில்ராஜ், பால்முனியசாமி, ஜெயசுதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி உட்பட பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்