search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி ஆதாரமின்றி  குற்றம் சாட்டக் கூடாது - அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
    X

    கடையநல்லூர் ஒன்றிய பகுதியில் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்த காட்சி. அருகில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், கலெக்டர் ஆகாஷ் உள்ளனர்.


    எடப்பாடி பழனிசாமி ஆதாரமின்றி குற்றம் சாட்டக் கூடாது - அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

    • கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சியில் ரூ. 10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், வேலாயுதபுரத்தில் ரூ. 9.36 லட்சம் மதிப்பீட்டில் ஊரணி புனரமைப்பு பணிகள், நயினாகரம் ஊராட்சியில் ரூ. 57 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிடட்டார்.
    • தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 145 சமத்துவபுரங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சியில் ரூ. 10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், வேலாயுதபுரத்தில் ரூ. 9.36 லட்சம் மதிப்பீட்டில் ஊரணி புனரமைப்பு பணிகள், நயினாகரம் ஊராட்சியில் ரூ. 57 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிடட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து துறைகளும்

    தமிழக அமைச்சர்கள், துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்களை ஒருங்கிணைத்து முதல்-அமைச்சர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், சமத்துவபுரங்களில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

    மக்கள் நலஅரசு

    மக்கள் நல அரசாக தி.முக. அரசு இருந்து வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 145 சமத்துவபுரங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள சமத்துவபுரங்களும் விரைவில் புனரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எதிர்கட்சி தலைவர்

    அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்தித்து அரசு குறித்து குற்றச்சாட்டுகளை அளித்துள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அமைச்சராக, முதல்-அமைச்சராக இருந்தவர் போகிற போக்கில் குற்றம் சாட்டுவது சரியல்ல. ஆதாரமின்றி குற்றம் சாட்டக் கூடாது என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    ஆய்வின் போது கலெக்டர் ஆகாஷ், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ் , துணைச்சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், பஞ்சாயத்து தலைவர்கள் முத்தையா என்ற முத்து, ஜெயக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் முகைதீன் கனி, முருகன், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் உட்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.




    Next Story
    ×