என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்னணு தேசிய வேளாண் சந்தை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
- விவசாயிகள் மற்றும் வியா பாரிகளுக்கான மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
- தேசிய வேளாண்சந்தை திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் மூலம் நடைபெறும் ஏலத்தால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் மற்றும் வியா பாரிகளுக்கான மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அரசு வேளாண்மை விற்பனை மற்றும் மேலாய்வு இயக்குனரகத்தின் சென்னை அலுவலக துணை வேளாண் விற்பனை ஆலோசகர் கோவிந்த ரெட்டி, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) நாசர் மற்றும் நாமக்கல் விற்பனை குழு செயலாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு
மின்னனு தேசிய வேளாண்
சந்தை திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் மூலம் நடைபெறும் ஏலத்தால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில், விற்பனை ஆலோ சகர் கோவிந்தரெட்டி பேசுகையில், மத்தியஅரசு விவசாயிகள் நலன் கருதி வார்டு திட்டத்தின் கீழ் வேளாண்மை விற்பனை உட்கட்டமைப்பு நிதியை அதிக அளவில் வழங்கி உள்ளது. வேளாண்மை விற்பனை உட்கட்டமைப்பு நிதியில் பெண்களுக்கு 33.3 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். எனவே இத் திட்டத்தினை விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பயன்ப டுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்கா ணிப்பாளர் யோகானந்த், மேலாளர் ராஜாக்கண்ணு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.






