என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் திறனாய்வு செம்மல் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் திறனாய்வு செம்மல் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/28/1769033-13.jpg)
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் திறனாய்வு செம்மல் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரை சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும்.
- தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரை சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும்.
தஞ்சாவூர் :
தஞ்சாவூர் தமிழ் பல்கலை க்கழகப் பதிவாளா் (பொ) தியாகராஜன் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் தமிழறிஞருமான சுப்புரெட்டியாா் 100 கல்வி அறக்கட்டளை சாா்பாக 2021 ஆம் ஆண்டுக்கான திறனாய்வுச் செம்மல் விருது வழங்கப்பட உள்ளது.
தமிழ் மொழி, இலக்கியம், தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரைச் சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும்.
2022 ஆம் ஆண்டுக்கான விருது 2020 - 21 ஆம் ஆண்டுகளில் தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்குப் பங்களிப்பு செய்த ஆய்வுகளைச் செய்தோா், உரிய நூல்கள், தன் விவரக்குறிப்புடன் விண்ணப்பிக்கலாம்.
தகுதி உடையோரைப் பிறரும் பரிந்துரை செய்யலாம்.
விருதுக்குத் தனியொரு நூலோ, ஒட்டுமொத்தப் பங்களிப்போ கவனத்தில் கொள்ளப்படும்.
விண்ண ப்பங்கள், பரிந்துரைகள் அக்டோபா் 10 ஆம் தேதிக்குள் ந. சுப்புரெட்டியாா் - திறனாய்வுச் செம்மல் விருது, பதிவாளா் (பொறுப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.