search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரல் திருவழுதிநாடார்விளை புனித கரிந்தகை அந்தோணியார் ஆலய திருவிழா
    X

    சப்பரபவனி நடந்தபோது எடுத்த படம்.

    ஏரல் திருவழுதிநாடார்விளை புனித கரிந்தகை அந்தோணியார் ஆலய திருவிழா

    • திருவிழா கடந்த 9-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏரல் சூசையப்பர் ஆலய முற்றத்தில் தொடங்கிய சப்பரபவனி மெயின் பஜார், காந்தி சிலை வழியாக திருவடிநாடார்விளையை சென்றடைந்தது.

    ஏரல்:

    ஏரல் புனித சூசையப்பர் ஆலயத்தில் கோவிலில் கிளைப் பங்கான திருவழுதிநாடார் விளை புனித கரிந்தகை அந்தோணியாரின் 101 -ம்ஆண்டு திருவிழா நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றோரம் அமர்ந்திருக்கும் இந்த அந்தோனியார் தன்னை தேடி வருவோருக்கு புதுமைகள் பல புரிந்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்த ஆலய

    திருவிழா கடந்த 9-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று திருப்பலியுடன் விழா நிறைவு பெற்றது. நேற்று மாலை ஆராதனைக்கு ஆயர் இல்ல ரஞ்சித்குமார் கர்டோசா தலைமை தாங்கினார். திருவிழா திருப்பலிக்கு பணகுடி கிராஸ்மீலாபுரம் இசிதோர் தலைமை தாங்கி செய்தி வழங்கினார். ஏரல் சூசையப்பர் ஆலய முற்றத்தில் தொடங்கிய சப்பரபவனி மெயின் பஜார், காந்தி சிலை வழியாக திருவடிநாடார்விளையை சென்றடைந்தது. வெளியூர்களில் வியாபாரம் செய்து வரும் உறவுகள், ஏரல் சூசையப்பர் குடும்ப உறவுகள், பக்கத்து கிராமத்து பக்தர்கள் என ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

    இரவும், பகலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டது. இன்று ஊர் பொது அசனம் நடைபெறுகிறது. விழாவில் ஜாதி, மத பேதமில்லாமல் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் மற்றும் பங்குத்தந்தை ரவீந்திரன், பர்னாந்து ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×