search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வாகனம்- சரக்கு வேன் மோதி 2 பேர் காயம்
    X

    அரசு வாகனம்- சரக்கு வேன் மோதி 2 பேர் காயம்

    • வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக அரசு வாகனம் மற்றும் சரக்கு வேன் மோதி கொண்டது. இதில் அரசு வாகன டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இது குறித்து ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தில் ஹீமோ குளோ பினோபதி திட்ட விரிவாக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவுக்காக ஈரோட்டில் இருந்து தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட அரசு வாகனம் கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் மாலை அந்த அரசு வாகனம் ஈரோடு சென்றது.

    அந்த அரசு வாகனம் ஆசனூர் தேசிய நெடுஞ் சாலை செம்மண்திட்டு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு ஒரு சரக்கு வேன் சென்றது.

    அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக அரசு வாகனம் மற்றும் சரக்கு வேன் மோதி கொண்டது. இதில் அரசு வாகன டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அப்போது நிகழ்ச்சி முடித்து கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த வழியாக வந்தார். விபத்து குறித்து அமைச்சருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து அமைச்சர் சம்பவ இடத்தில் இறங்கி விபத்து குறித்து கேட்டறிந்தார்.

    இது குறித்து ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×