என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னிமலையில் கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் 3 பேர் சிறையில் அடைப்பு
- நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
- இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் இண்டேன் கேஸ் ஏஜென்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவில் நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
பின் தரைத்தளத்தில் உள்ள கேஸ் ஏஜென்சியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மறுநாள் காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் 3 வாலிபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் அஸ்சூரன்ஸ் அலுவலகத்தில் பல ஆயிரமும், கேஸ் ஏஜென்சியில் பல ஆயிரமும் கொள்ளை அடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவங்களை வைத்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த சென்னி மலை வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதன் அடிப்படையில் சென்னிமலை அருகில் உள்ள எம்.பி.என். நகரில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.
விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனோவார்ஹுசைன் (21), சைக்குள் இஸ்லாம் (29), மன்சூர் அலி (23) ஆகிய 3 வாலிபர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் அஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து மொத்தம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்