என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
64 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கியது
- ஈரோடு மாவட்டத்தில் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி கொல்லம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.
- கலெக்டர் கிருஷ்ண னுண்ணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
அரசு தொடக்க பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவி–களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, இடைநிற்றலை தவிர்க்க காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இத்திட்டத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரையில் அண்ணா பிறந்தநாளை யொட்டி தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 26 பள்ளிகளை சேர்ந்த 2,523 மாணவ, மாணவிகள், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளை சேர்ந்த 768 மாணவ, மாணவிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 3,291 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி கொல்லம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு சுடச்சுட கோதுமை ரவா, ரவா கேசரியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்தும் சாப்பிட்டார்.
இதில் மேயர் நாகரத்தினம், கணேச மூர்த்தி எம்.பி., துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.
இதேபோல் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திகனாரை அரசு தொடக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்) காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவர் களுக்கு உணவுகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
திங்கட்கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய் க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண்பொங்கல் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சோள காய்கறி ரவா கேசரி வழங்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்