என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு அவசரகால ஒத்திகை
- கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு:
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் மார்ச் மாதம் முதல் வேகமாக பரவ தொடங்கி யது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே 2 இலக்கில் பதிவாகி வந்த கொரோனோ பாதிப்பு தற்போது 3 இலக்கில் பதிவாகி வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்புபோல் முககவசம் அணிய வேண்டும். கை கால்களை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 வாரத்திற்கு மேலாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவ மனைகள்,அரசு மருத்துவ மனை, நகர்ப்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்று ம் நர்சுகள், மருத்துவர்கள், நோயாளிகள், நோயாளி களை பார்க்கும் வரும் உறவினர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்ற புதிய உத்தரவு அமலுக்கு வந்தது.
இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வா ய்க்கிழமை) கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கொடுமுடி போன்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்க வசதி உள்ளதா? ஆக்சிஜன் வசதி உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதேப்போல் மருத்துவ மனைகளில் போதிய மருந்துகள் கையிருப்பு உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தை பொறுத்த வரை தினமும் 2, 3 பேர் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர்.
ஒரு வாரத்திற்கு 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளையும் ஈரோடு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்