search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சஷ்டியையொட்டி கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    சஷ்டியையொட்டி கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சஷ்டியையொட்டி பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.
    • அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பணியாளர்கள் மட்டும் இன்றி தனியார் காவலாளிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. கோவிலின் இரு பஸ்களும் காலை முதல் தொடர்ந்து இயக்கப்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சஷ்டியையொட்டி பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். குறிப்பாக முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய் கிழமை. இதே நாளில் மற்ற அம்சங்களும் சேர்ந்து கொண்டதால், சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    செவ்வாய்கிழமை, சஷ்டி இரண்டும் நேற்று இணைந்து வந்ததால் சென்னிமலை மலை முருகன் கோவிலில், அதிகாலை முதலே, பக்தர்கள் குவியத் தொடங்கினர். காலை முதல் இரவு வரை, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார். பக்தர்கள் தர்ம தரிசனத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ. 25 கட்டண தரிசனத்திலும் 30 நிமிடங்களுக்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சென்னிமலை முருகப்பெருமானை தரிசித்தனர்.

    அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பணியாளர்கள் மட்டும் இன்றி தனியார் காவலாளிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. கோவிலின் இரு பஸ்களும் காலை முதல் தொடர்ந்து இயக்கப்பட்டது.

    Next Story
    ×