search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானியவிலை நிலக்கடலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்
    X

    மானியவிலை நிலக்கடலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்

    • நிலக்கட லையை விவசாயிகள் பெற்று சென்றனர்.
    • ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து வீடு திரும்பினார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை சுற்று வட்டார விவசாயிகளுக்கு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்த அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலகம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய விலை நலத்திட்டங்கள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம். நெல்,தென்னங்கன்று நிலக்கடலை உள்ளிட்ட விதை வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்களிடம் உள்ள நில ஆவணங்களை கொண்டு மானிய விலை அரசு சலுகைகளால் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மாபேட்டை வேளாண்மை அலுவல கத்தில் மானிய விலையில் நிலக்கடலை கிடைப்பதாக தகவல் அறிந்து விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்து கிலோ ரூ15 வீதம் தலா 20 கிலோ நிலக்கட லையை விவசாயிகள் பெற்று சென்றனர்.

    இதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைத்ததால் மற்றவர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த குறிச்சி பகுதி விவசாயிகள் 2 வது நாளாக நேற்றும் வேளா ண்மை அலு வலகத்துக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் வேளாண் அலுவலர்களிடம் கேட்ட பொழுது நிலக்கடலை தீர்ந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து வீடு திரும்பினார்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் அரசு விவசாயி களுக்கு என தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்தி ட்டங்களை வழங்கி வருகிறது.

    இதுகுறித்த விபரங்களை அலுவலர்கள் விவசாயிகளுக்கு முறையாக தெரி விப்பதில்லை அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து அரசு சலுகைகள் குறித்து தெரிவித்து அவர்களுக்கு மட்டு மே வழங்கி வருகின்றனர்.

    ஏழை எளிய விவசாயிகளுக்கு எந்தவித தகவலும் முழுமை யாக கிடைப்பது இல்லை. அரசு அனைத்து விவசாயி களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயன்படுத்துவதால் எங்களைப் போன்ற சிறுகுறுவிவசாயிகள் ஏமாற்றம் அடைகின்றோம்.

    எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் வட்டாரத்தில் உள்ள அனைத்து சிறுகுறு விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி தகவல் முறையாக தெரிவிக்கப்பட்டு பின்னர் மானிய விலை பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

    Next Story
    ×