search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைத்தறி நெசவாளர்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும்
    X

    கைத்தறி நெசவாளர்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும்

    • நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
    • மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.


    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மே ளன தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

    கைத்தறி நெசவு தொழில் என்பது நூற்றாண்டு பாரம்பரிய மிக்க அரிய குடிசை தொழில். சிறு தொழிலாகும். தற்சமயம் கைத்தறி நெசவு கூட்டுறவு அமைப்பின் கீழ் அரசை நம்பி மட்டுமே நடந்து வருகிறது.

    தொழில்துறை மாற்றங்கள் மற்றும் நவீன விசைத்தறிகளின் வருகை யால் கைத்தறி நெசவை மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு கொண்டு சென்று உள்ளது.

    தொழில் துறை மாற்ற ங்கள் ஒருபுறம் இருந்தாலும் அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றளவும் கிடைக்க பெறாததும் கைத்தறி நெசவின் அழி விற்கு முக்கிய காரணமாகும்.

    எனவே நெசவாளர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெற்று தர வேண்டியது நம் எல்லோ ருடைய முக்கிய கடமை யாகும். நெசவாளர்களுக்கு கூலியை அரசுதான் வழங்கி வருகிறது.

    நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

    நெசவாளர் சங்கங்களில் நிதி ஆயிரத்திலிருந்து தான் கூலி வழங்கபடுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். நெசவாளர் ஊதியத்திற்கும், அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் எதற்காக ஊதிய உயர்வு வழங்கும் நிலையை அரசு தன்கட்டுப் பாட்டில் வைத்து கொண்டு உள்ளது.

    ஊதிய உயர்வை வழங்கும் நிலையை அரசு தன் கட்பாட்டிலிருந்து மாற்றி கூட்டுறவு சங்கங் களின் மண்டல அல்லது சரக அளவில் முடிவு செய்து கொள்ள உரிய அனுமதியை உடனடியாக வழங்கிட தங்களை அன் போடு கேட்டுக் கொள்கிறோம்.

    இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில் கைத்தறி நெசவா ளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வை வழங்க அரசானை வெளியிட ஆவண செய்ய வேண்டும்.

    தற்சமயம் தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு எவ்வித மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.

    கடந்த காலங்களில் மாநில அரசின் பங்களிப்போடு மத்திய அரசின் மூலம் ஆண்டு ஒன்றிக்கு ரூ.30 ஆயிரம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது.

    தற்சமயம் கைத்தறி நெசவில் ஈடுபட்டு உள்ளவர்கள் 60 வயதை நெருங்கியவர்களும் அதனை தாண்டியவர்களும் உள்ளனர்.

    மருத்துவ செலவினங்களுக்காக மாதம் ஒன்றுக்கு குறைந்தது ரூ.300 வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

    இதை அறிந்து தான் தமிழக அரசே நெசவாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடைமுறை படுத்த கடந்த ஆண்டே அறிவிப்பு வழங்கி இருந்தது.

    எனவே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலாவது புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி அரசைமட்டும் நம்பி வாழும் தமிழக கைத்தறி நெசவா ளர்கள் குடும்பங் களை காப்பாற்ற வேண்டுகி–றோம்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×