search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரிப்பு
    X

    ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரிப்பு

    • ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் தூத்துக்குடி, காரைக்கால் ,கேரளா நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து 12 டன்கள் மீன்கள் வரத்தாகி இருந்தன.
    • கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது .

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    கடல் மீன்கள் அதிக அளவில் விற்கப்படுவதால் மக்கள் அதிகாலை முதலே மீன்களை வாங்கி செல்வார்கள். தூத்துக்குடி, காரைக்கால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து மீன்கள் விற்ப னைக்கு வந்தன. இங்கு நாளொன்றுக்கு 8 டன்கள் மீன்கள் வரத்தாகி வந்தன.

    இந்நிலையில் இன்று ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் தூத்துக்குடி, காரைக்கால் ,கேரளா நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து 12 டன்கள் மீன்கள் வரத்தாகி இருந்தன. இதனால் கடந்த வாரத்தை விட மீன்கள் விலை சற்று உயர்ந்திருந்தன.

    சிறிய மீன்கள் கிலோ ரூ. 25 வரையும், பெரிய மீன்கள் கிலோ ரூ.50 வரையும் உயர்ந்திருந்தன.

    இன்று மீன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    வஞ்சரம்-750, சீலா பெரியமீன்-600, சிறிய மீன்-300, சங்கரா-350, அயிலை-200, மத்தி-170, முரல்-300, திருக்கை-400, சின்னராட்டு-300, பெரியராட்டு-500, மெல்ல வவ்வால்-700, இறால்-650, சின்ன இறால் - 500, சுறா-600, நண்டு-600.

    இதேபோல் கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது . இதனால் வியாபாரமும் சுறுசுறுப்பாக நடைபெற்றது. இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    Next Story
    ×