என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பவானி-கொடுமுடி கரையோர பகுதியில் இயல்பு நிலை திரும்பியது
- மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.
ஈரோடு:
மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் காவிரி ஆறு, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து 2.15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, நெருஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி போன்ற கரையோரப் பகுதியில் வசித்த 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் 14 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அதேபோல் பவானிசாகர் அணையில் இருந்தும் 25 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. பவானி ஆறு, காவிரி ஆற்றில் ஒரே நேரத்தில் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால் பவானி கூடுத்துறையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதேப்போல் கொடுமுடியிலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
இதேப்போல் பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் உபரி நீர் திறப்பு குறைந்தது. இதனால் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது.
இன்று மேட்டூர் அணையிலிருந்து 45 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது. இதேபோல் பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது.
இதனால் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
வீடுகளில் சூழ்ந்த வெல்லம் வடியத் தொடங்கிவிட்டது. எனினும் வீடுகளில் சேரும் சகுதியுமாக காட்சியளிக்கிறது. இதனை பொதுமக்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது. தற்போது முகாமில் ஒரு சில மக்களே தங்கியுள்ளனர். அவர்களும் நாளைக்குள் வீடு திரும்பி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்