என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![முதியவர் தூக்கு போட்டு தற்கொலை முதியவர் தூக்கு போட்டு தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2023/06/26/1905151-untitled-1.webp)
X
முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
By
மாலை மலர்26 Jun 2023 4:11 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் மூட்டு அறுவை சிகிச்சையால் மணி அவதிப்பட்டு வந்துள்ளார்.
- மணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரது 2 முழங்கால்க ளிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (63). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரது 2 முழங்கால்க ளிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் மூட்டு அறுவை சிகிச்சையால் மணி அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு மணி தனது வீட்டினுள் உள்ள பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெருந்துறையில் வசித்து வரும் அவரது மகள் நந்தினிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X