search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் சேதம் அடைந்த மேல்மட்ட பாலம்
    X

    தொடர் மழையால் சேதம் அடைந்த மேல்மட்ட பாலம்

    • ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்லும் நீர்வழி பாதையின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம் மழை நீர் வெள்ளத்தால் சேதம் அடைந்து ஒரு பகுதி கீழே இறங்கி தரை தட்டி நிற்கும் நிலையில் உள்ளது.
    • இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த வேம்பத்தி ஊராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட நல்லா மூப்பனூர் பிரிவு பகுதியில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் பலர் வாகனங்களில் சென்று வருகிறார்கள்.

    எட்டிக்குட்டையா பாளையம், பொதிய மூப்ப னூர், சேத்தனாம்பாளையம், பருவாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாகவும் ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்ல க்கூடிய நீர்வழிப் பாதையாகவும் உள்ளது. இந்த பகுதியில் மேல்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி சுற்று பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியது.

    இதனால் ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்லும் நீர்வழி பாதையின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம் மழை நீர் வெள்ளத்தால் சேதம் அடைந்து ஒரு பகுதி கீழே இறங்கி தரை தட்டி நிற்கும் நிலையில் உள்ளது.

    இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த வழியாக ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் செல்ல முடியாத நிலையும் நிலவி வருகிறது இதனால் பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே இந்த சேதமடைந்த மேல்மட்ட பாலத்தை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×