என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
- கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
- ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கொரோனா காரணமாக உயிரிழந்த பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜோதி தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.
இதில் 124 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதில் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சதீஷ்குமார், இலவச சட்ட ஆலோசனை மையத்தின் வக்கீல் கவிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வில்லியம்ஸ் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.