search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு
    X

    108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு

    • ஈரோடு அரசு மருத்துவமனை டி.பி.ஹாலில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்காணல் நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவமனை டி.பி.ஹாலில் வரும் 28-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்காணல் நடக்க உள்ளது.

    மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., பி.எஸ்.சி., விலங்கியல், உயிரியல், தாவரவியல், பயோகெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி படித்திருக்கலாம். இவர்களுக்கு மாதம் 15,435 ரூபாய் ஊதியம்.

    இதில் 19 முதல் 30 வயதினர் பங்கேற்கலாம். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான நேர்காணல் நடக்கும்.

    ஓட்டுனர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 24 முதல் 35 வயதினர் இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் அனுபவம் பேட்ஜ் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

    இவர்களுக்கு 15,235 ரூபாய் ஊதியம். எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனித வள துறை நேர்காணல், கண் பார்வை, வாகனம் ஓட்டி தேர்வு நடத்தப்படும்.

    கூடுதல் விபரம் அறிய 73388 94971, 73977 24829, 73977 24813 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×