search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆந்திரா-கர்நாடகா மாநில வியாபாரிகள் குவிந்தனர்
    X

    ஆந்திரா-கர்நாடகா மாநில வியாபாரிகள் குவிந்தனர்

    • வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
    • அலைமோதும். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    ஈரோடு,

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடைகள் வார கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த ஜவுளி சந்தை உலகப் புகழ்பெற்றது. இதில் மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். மற்ற இடங்களை காட்டிலும் இங்கு விலை குறைவாக இருப்பதால் இங்கு எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூட்டம் அலைமோதும். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முதல் வழக்கம் போல் ஜவுளி வார சந்தை கூடியது. சென்ட்ரல் தியேட்டர் அருகே உள்ள வளாகத்திலும் வாரச்சந்தை கூடியது. இதே போல் அசோகபுரம் பகுதிகளிலும் ஜவுளி சந்தை கூடியது.

    ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஜவுளி சந்தையில் குவிந்தனர். கேரளாவில் இருந்து குறைந்த அளவிலும் , தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.

    தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரம் இருப்பதால் பள்ளி சீருடைகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதே போல் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காட்டன் சம்பந்தமான துணிகள் விற்பனை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    குறிப்பாக ஆந்திரா , கர்நாடகா மாநில வியாபாரிகள் காட்டன் துணிகளை மொத்தமாக வாங்கி சென்ற னர். இதனால் இன்று மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது. இதேப்போல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர்.

    இதனால் இன்று சில்லரை விற்பனையும் 45 சதவீதம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.

    குறிப்பாக காட்டன் துணிகள் வேஷ்டிகள் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் பள்ளி குழந்தைகளின் லன்ச் டவல் விற்பனையும் அதிகமாக இருந்ததாக தெரிவித்தனர்.

    Next Story
    ×