என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பவானியில் புதிய காய்கறி மார்க்கெட் அமைப்பது குறித்த அவசர கூட்டம்
- பவானி நகர் பகுதியில் புதிய தினசரி காய்கறி சந்தை கட்டி டம் கட்டுவது குறித்த அவசரக் கூட்டம் நடைபெற்றது.
- காய்கறி சந்தை ரூ.1.30 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
பவானி:
பவானி நகராட்சி கூட்ட அரங்கில் தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் அறிவிப்பு எண் 13-ன் படி பவானி நகர் பகுதியில் புதிய தினசரி காய்கறி சந்தை கட்டி டம் கட்டுவது குறித்த அவசரக் கூட்டம் நடைபெற்றது.
பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ வன் தலைமை வகித்தார். ஆணை யாளர் மோகன் குமார், துணைத்தலைவர் மணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
இந்த அவசரக் கூட்ட த்தில் பவானி நகராட்சிக்கு உட்பட்ட பழைய வார சந்தை ரோட்டில் அமை ந்துள்ள காய், கனி தினசரி மார்கெட் அமைந்துள்ளது. இநத காய்கறி சந்தை ரூ.1.30 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வா கத் துறை மூலம் பவானி நக ராட்சி பகுதியில் மார்க்கெட் அமைப்பது குறித்து நகர்மன்ற கூட்ட த்தொடர் நடத்தி தீர்மா னம் நிறைவேற்றி முடிவை அறிவிப்பது என நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.
இதில் எடுக்கப்படும் முடிவுகள் நகராட்சி துறை உயர் அதிகாரிகளுக்கு வழங்கி கட்டிடம் கட்ட பணிகள் தொடங்க ஆய்வு மேற்கொ ள்ளப்படும் வகையில் இந்த அவசரக் கூட்டம் நடைபெ ற்றது.
பவானியில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 25 கவுன்சிலர்கள் உள்ளனர். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு .க. 4, சி.பி,ஐ. மற்றும் சுயேச்சை கலந்து கொண்டு இந்த தீர்மானம் குறித்து விவா தத்தில் ஈடுபட்டனர்.
இதில் 16 பேர் ஆதரவும், 8 பேர் ஆதரவு இல்லை என்றும், ஒருவர் பரா மரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரி வித்தனர்.
இதை தொடர்ந்து தினசரி காய்கறி மார்க்கெட் இருக்கும் இடத்திலே புதியதாக காய்கறி மார்க்கெட் கட்டப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.