search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாளடி‌ நாற்று‌ பறிப்பு பணிகளில் விவசாயிகள் மும்முரம்
    X

    தாளடி‌ நாற்று‌ பறிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

    தாளடி‌ நாற்று‌ பறிப்பு பணிகளில் விவசாயிகள் மும்முரம்

    • ஒரு போக சம்பா சாகுபடி செய்யும் நிலையில், பலர் தாளடி சாகுபடியில் இறங்கி உள்ளனர்.
    • நாற்று நன்றாக வளர்ந்துள்ள நிலையில் ஆட்களை விட்டு பறித்து கட்டும் பணி நடக்கிறது.

    வல்லம்:

    தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு முன்கூட்டியே மே மாதத்திலேயே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் மும்முரம் காட்டினர்.

    இதனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி குறுவை சாகுபடி நடந்தது.

    மழையால் பாதிப்புகள் இருந்தாலும் குறுவை அறுவடையை முடித்துள்ளனர் விவசாயிகள்.

    நெல்லை காயவைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அவ்வபோது பெய்யும் மழையால் நெல் நனைந்தாலும் தொடர்ந்து காயவைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியில் தாளடி சாகுபடிக்காக நாற்று விட்டு அதை பறித்து கட்டும் பணிகளில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தீவிரம் காட்டினர். ஒரு சில விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடி செய்யும் நிலையில், பலர் தாளடி சாகுபடியில் இறங்கி உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, குறுவை நெல் போட்டு இப்போதுதான் அறுவடை முடிந்து விற்பனை செய்தோம். அடுத்ததாக தாளடி சாகுபடிக்காக 50 குழியில் விதை தெளித்து நாற்று விட்டோம்.

    இது மூன்று ஏக்கருக்கு நடலாம். நாற்று நன்றாக வளர்ந்துள்ள நிலையில் ஆட்களை விட்டு பறித்து கட்டும் பணி நடக்கிறது. பின்னர் வயலில் தாளடி நாற்றுக்கள் நடப்படும்.

    140 நாட்கள் வயதுடைய ரகத்தை சாகுபடி செய்துள்ளோம். தை மாதம் இறுதியில் அறுவடைக்கு தயாராகி விடும். மாசியில் அறுவடை செய்வோம் என்றனர்.

    Next Story
    ×