என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் 692 குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கலாம்- குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
- நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் 41.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
- விவசாயிகள் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா முன்னிலை வகித்தார். இதில் வேளாண் இணை இயக்குனர் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயி களிடையே கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-
நடப்பு ஆண்டில் மழை குறைவு
நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் 41.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழையளவை விட 37.35 சதவீதம் கூடுதலாகும். நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் முடிய 270.90 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. இது வழக்கமான மழையளவை விட 17.65 சதவிகிதம் குறைவாகும். கடந்த 5 ஆண்டு சராசரி மழையுடன் ஒப்பிடும் போது 41.12 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 பருவக்காலங்களில் ஏற்பட்ட மழை குறைவு தொடர்பாகவும், அதனால் ஏற்பட்ட பயிர் சாகுபடி பரப்பு குறைவு, பயிர் பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், அணைகளின் நீர் இருப்பு குறைவு காரணமாக விவசாய தேவைக்கு போதுமான நீர் திறக்க இயலாதது குறித்தும் அரசுக்கு விரிவான அறிக்கை மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது வேளாண்மை உழவர் நலத்துறையின் பரிசீலனையில் உள்ளது. மேலும், வன்னிக்கோனேந்தல் பகுதி விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாகவும் அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன்கார் பருவத்தில் 870 ஹெக்டேர் பரப்பில் மற்றும் கார் பருவத்தில் 3131 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடியும், 259 ஹெக்டேர் பரப்பில் சோளம், கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும், 1620 ஹெக்டேர் பரப்பில் பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு சர்வேதச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும். மேலும், நடப்பு ஆண்டில் மாற்றுப் பயிர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1825 ஹெக்டேர் பரப்பில் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் நிலங்களின் மண் வளத்தை பெருக்கிட குளங்களில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு சென்ற ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள 251 குளங்களும், இரண்டாவதாக 368 குளங்களும் மொத்தம் 619 குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 73 குளங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளின் கீழ் கோடைமேலழகியான் கால்வாய் 7.50 கிலோ மீட்டர் வரை அடையக்கருங்குளம் கிராமம் மற்றும் அம்பா சமுத்திரம் பகுதிகளிலும், நதியுண்ணி கால்வாய், ஆலடியூர் கிராமம் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதி களிலும், கன்னடியன் கால்வாய் திம்மராஜபுரம், கல்லிடைகுறிச்சி, மற்றும் வெள்ளாங்குளி பகுதிகளிலும், கோடகன் கால்வாய் கொண்டாநகரம், பேட்டை ரூரல், பேட்டை கிராமப் பகுதிகளிலும், பாளையங்கால் கால்வாய் புத்தனேரி, சீதப்பனேரி, மற்றும் பாளை கிராமப் பகுதிகளிலும், பெருங்கால் கால்வாய் மணிமுத்தாறு கிராமப் பகுதி களிலும் துார்வாரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்