search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக பரவி வரும் கால்நடை நோயால் விவசாயிகள் அச்சம்
    X

    கால்நடைகளுக்கு புதிதாக பரவி வரும் வட்டவடிவிலான தடுப்புகளை படத்தில் காணலாம்.

    புதிதாக பரவி வரும் கால்நடை நோயால் விவசாயிகள் அச்சம்

    • குமாரபாளையத்தில் புதிதாக பரவி வரும் கால்நடை நோயால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு ஏற்பட்டு, அது அனைத்து கால்நடைகளுக்கும் பரவி வருகிறது. கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி டாக்டர்கள் ரமேஸ்குமார், சதீஷ், செந்தில்குமார் ஆகியோர் நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இது சாதாரண வைரஸ் நோய், இதற்காக அச்சப்பட வேண்டியதில்லை என்று கூறினர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், கால்நடை டாக்டர்கள் அச்சப்படா தீர்கள் என்றாலும், கால்நடைகளின் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து விவசாயிகளும் மருத்துவமனைக்கு தங்கள் கால்நடைகளை அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்வதென்பது சாத்தியமில்லை.

    ஆகவே ஒவ்வொரு கிராமத்தின் முக்கிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு தடுப்பூசி போட்டால், விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதோடு பல கால்நடைகளை நோய் பாதிப்பு, நோய் பரவலில் இருந்து காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×