search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரையில் கடம்பாகுளம் முன்சாகுபடி செய்ய தாமிரபரணி-நீர் வழங்க கோரி விவசாயிகள் கூட்டம்
    X

    ஆழ்வை ஒன்றிய விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்ற காட்சி.

    தென்திருப்பேரையில் கடம்பாகுளம் முன்சாகுபடி செய்ய தாமிரபரணி-நீர் வழங்க கோரி விவசாயிகள் கூட்டம்

    • தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விவசாயிகள் கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆழ்வை ஒன்றிய குழு மற்றும் கடம்பாகுளம் விவசாயிகள் இணைந்து தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விவசாயிகள் சங்க தலைவர் குருகாட்டூர் பூலான் தலைமையில், ரவிச்சந்திரன், நயினார் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் கடம்பாகுளம் பாசனத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் அறுவடையானதும், எதிர் வரும் மார்ச் மாதத்திற்குள் கடம்பாகுளம் நீர் மட்டம் அறிந்து முன் சாகுபடி செய்ய கடம்பாகுளம் விவசாயிகளை கேட்டுக்கொள்வதும் காலம் தாழ்த்தாமல் முன்சாகுபடி செய்ய தாமிரபரணி நீர் வழங்க அனுமதி கேட்பது மறுக்கும் பட்சத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும், மேலும் நெல்கொள் முதல் நிலையம் கூடுதலாக அறுவடை காலத்தில் விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகத்தினை கேட்டு கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆழ்வார் திருநகரி சுற்று வட்டாரத்திலுள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×