என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதிய கட்டளை மேட்டு கால்வாய் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- கனமழையால் புதிய கட்டளை மேட்டு கால்வாய் பாசன பகுதி ஏரிகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது.
- பூதலூர் ஒன்றிய விவசாயிகள் சிரமமின்றி ஒருபோக சாகுபடி செய்ய பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூதலூர்:
பூதலூர் ஒன்றியத்தில் செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் வழியாக தண்ணீர் பெற்று 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரப்பி அதன் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு போக சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்திற்குகாக மேட்டூர் அணை கடந்த மே 24-ந் தேதி திறக்கப்பட்ட நிலையில் புதிய கட்டளை மேட்டு கால்வாயில் அதன் தலைப்பு உள்ள கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து தண்ணீர் கடந்த ஜூலை 16-ந் தேதி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கரூர், திருச்சி மாவட்டங்களை கடந்து தஞ்சை மாவட்ட த்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டம் அசூர் அருகில் கட்டளை கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால், அதனை அடைப்பதற்காக மாயனூரில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
இது போன்ற சூழ்நிலையில் பூதலூர் ஒன்றியத்தில் அவ்வப்போது கொட்டி தீர்க்கும் கனமழையால் புதிய கட்டளை மேட்டு கால்வாய் பாசன பகுதி ஏரிகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. புதிய கட்டளை மேட்டு கால்வாயின் கடைமடை ஏரியாக உள்ள பூதலூர் ஒன்றியம் செல்லப்பன்பேட்டை பெத்தமாதுரான் ஏரியில் முழு கொள்ளளவும் நிரம்பி கடல் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது. இதனால் திருச்சி மாவட்ட த்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைத்து பொய்கைகுடி ஏரியை நிரப்பி பூதலூர் ஒன்றிய பகுதி பாசனத்திற்காக புதிய கட்டளை மேட்டு கால்வாயில் முழு கொள்ளளவில் தண்ணீரை திறந்து விட்டு அனைத்து ஏரிகளையும் நிரப்பி, பூதலூர் ஒன்றிய விவசாயிகள் சிரமமின்றி ஒருபோக சாகுபடி செய்ய பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.