search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்பு
    X

    தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்ற விவசாயிகள்.

    குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்பு

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கோரிக்கை மனு அளித்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • தமிழ்நாடு அரசே முழு தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கருப்பு பேச்சு அணிந்திருந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவைக்கு பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்காததை கண்டித்தும், சம்பா பயிருக்கு இதுவரை காப்பீடு அறிவிக்காததை கண்டித்தும் அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-காவிரி நடுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் படி தமிழ்நாட்டிற்கு மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் அரசு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குறுவைக்கான பயிர் காப்பீடு திட்டத்திற்கு காப்பீட்டு நிறுவனங்கள் முன்வராத நிலையில் தமிழ்நாடு அரசே காப்பீட்டு நிறுவனத்தை தொடங்கி செயல்படுத்த வேண்டும்.

    ஆற்று பாதுகாப்பு கோட்டம் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் அய்யாசாமி பட்டி பகுதியில் முழுமை யாக தூர்வாரப்படாமல் பணி நடைபெற்றது. எனவே உரிய ஆய்வு மேற்கொண்டு தூர்வாரப்பட வேண்டும். தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசே முழு தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதேபோல் ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    Next Story
    ×