என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம்
- பணியிட மாறுதல்கள், பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும்.
- நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தஞ்சாவூர் மண்டலம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநிலத் துணைத் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளர் சுவாமிநாதன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் கோதண்டபாணி தொடக்க உரை ஆற்றினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்கள் என அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பணியிட மாறுதல்கள் , பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலர் பேசினர்.
முடிவில் டி.என்.ஜி.இ.ஏ. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சோமசுந்தரம் நிறைவுறையும், ஜெயங்கொண்டம் நகராட்சி மாநில செயலாளர் எஸ்தர் ஷோபா நன்றி உரையும் கூறினர்.