search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பெண் இன்ஸ்பெக்டர் தொல்லையால் திருநங்கை கான்ஸ்டபிள் ராஜினாமா
    X

    கோவையில் பெண் இன்ஸ்பெக்டர் தொல்லையால் திருநங்கை கான்ஸ்டபிள் ராஜினாமா

    • சமீபத்தில் குழந்தைகள், பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார்.

    கோவை,

    கோவையைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர் காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் குழந்தைகள், பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.

    இந்தநிலையில் அவர் இன்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் பிப்ரவரி மாதம் எனக்கு மேல் அதிகாரியாக பணியாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் என்னை பணி செய்ய விடாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டார். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டினார். இதனால் ஜனவரி 16-ந் தேதி 18 தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றேன்.

    பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பணிக்கு வந்தேன். இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக கட்டுப்பாட்டு அறை துணை சூப்பிரண்டும், எழுத்தரும் செயல்பட்டு என்னை பற்றி அவதூறாக பேசினர். இன்ஸ்பெக்டர் பற்றி 3 முறை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்து விட்டேன். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மேலும் இன்ஸ்பெக்டர் என்னை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்.

    தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு தண்டனை வழங்குகிறார்கள். இதனால் நான் இந்த பணியில் இருந்து விலகிக் கொள்கிறேன். எனக்கு அரசால் வழங்கப்பட்ட சீருடை மற்றும் இதரபொருட்களை ஒப்படைத்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×