என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்- கலெக்டர் தகவல்
- கையுந்துபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.
- ஒவ்வொருவரும் ஆதார் கார்டு பதிவேற்றம் செய்வது அவசியம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல் -அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாதத்தில் நடைபெற உள்ளது.
இதில் பொது பிரிவினர் ( 15 முதல் 35 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம், இறகு பந்து, கையுந்துபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.
இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு (12 வயது முதல் 19 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம் , கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து , நீச்சல் , கையுந்துபந்து, மேசைபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ( 17 வயது முதல் 25 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம் , கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து , நீச்சல் , கையுந்துபந்து, மேசைபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ( வயது வரம்பு இல்லை ) 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், கையுந்து பந்து, கபடி, எறிபந்து போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு ( வயது வரம்பு இல்லை ) கபடி, செஸ், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் நடக்க உள்ளது.
மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்து பந்து ஆகிய போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் முகவரியான www.sdat. tn.gov.in என்ற இணையதளத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பதிவில் பதிவு செய்யலாம்.
ஒவ்வொருவரும் ஆதார் கார்டு பதிவேற்றம் செய்வது அவசியம்.
இதில் பதிவு செய்வதற்கு நாளை ( ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும்.
எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் அதிக அளவில் பதிவு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகளில் பெருமளவில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்