என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஐந்தருவி வெண்ணமடை படகு குழாம் தயார் -ஓரிரு நாளில் படகு சவாரி தொடக்கம்
- சாரல் திருவிழா இந்த மாத இறுதியில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
- வெண்ண மடை குளத்தில் ஓரிரு நாட்களில் படகு சவாரி தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா இந்த மாத இறுதியில் அரசு சார்பில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
சாரல் திருவிழா நடத்துவதற்கான கோப்பு மனுக்கள் அனைத்தும் தமிழக சுற்றுலா துறைக்கும் தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பண்பாட்டு கலைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக சாரல் திருவிழா நடத்தப்படும் என்றும் கூறினார்.
தற்பொழுது ஐந்தருவி செல்லும் பாதையில் அமைந்துள்ள வெண்ண மடை குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் படகுசவாரி எப்போது தொடங்கப்படும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து வந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றன. இன்னும் ஓரிரு நாட்களில் படகு சவாரி தொடங்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.