search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் - கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்
    X

    மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள்.

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் - கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்

    • ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது அளக்குடி கிராமத்தில் ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது.
    • பாறாங்கற்கள் மற்றும் பனை மரங்களை கொண்டு தற்காலிகமாக அடைத்து சரி செய்யப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரை பலவீனமாக உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கரை மெலிந்துள்ள பகுதிகளில் மணல் முட்டைகளை அடுக்கி பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த 2018ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது அளக்குடி கிராமத்தில் ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது.

    அப்போது கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பாறாங்கற்கள் மற்றும் பனை மரங்களை கொண்டு தற்காலிகமாக அடைத்து சரி செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து கரையை ஒட்டி அங்கேயே தயார் செய்யப்பட்ட மணல் மூட்டைகளை அடிக்கி பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கொள்ளிடம் ஆற்றின் மற்ற பகுதிகளில் பலவீனமான கரைப்பகுதியை பலப்படுத்தும் வகையிலும் பிரதான புது மண்ணியாறு, தெற்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை போட்டு சரி செய்யும் பணியில் 5000 மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×