search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு
    X

    அமைச்சர் பெரியகருப்பன் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு

    • ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
    • பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடியும்.

    நாகப்பட்டினம்:

    ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    கீழையூர் வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் நாகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பா கோவிலில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் கட்டிட பணிகளை தரமாகவும் துரிதமாகவும் கட்டி முடித்திட பயணாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டார்‌.

    தொடர்ந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான 6.84 கோடி மதிப்பீட்டில் 188 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

    விழாவில் பேசிய அமைச்சர் இந்தாண்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு 20ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 21ஆயிரத்து 760கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவி வழங்கி தமிழக அரசு சாதனை படைத்ததாக தெரிவித்தார்.பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×