என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண் பரிசோதனை முகாம் நடந்தபோது எடுத்த படம்.
ஆறுமுகநேரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
- ஆறுமுகநேரி மெயின் பஜார் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- முகாமில் 7 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மெயின் பஜார் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கண்புரை நோய், அடிக்கடி தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்பட்டது. முகாமில் சுமார் 60 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். பலருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை கண் பரிசோதனை குழு மருத்துவர் இந்திரா, மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பிரமணி, ஆலோசகர் ராமலெட்சுமி, உதவியாளர் பேச்சுகுமார், ஆறுமுகநேரி ஆட்டோ ஒட்டுநர் சங்க தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் கிளாட்சன், பொருளாளர் சவரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story






