என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் மாமல்லபுரம் வெண்ணை உருண்டை கல்
    X

    லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் மாமல்லபுரம் வெண்ணை உருண்டை கல்

    • உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இருந்து விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
    • புராதன சின்னங்கள் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை :

    இந்தியாவில் விரைவில் ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இருந்து விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    அவர்கள் நம் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உலக பாரம்பரிய புராதன சின்னங்கள் மூலம் இந்த மாநாட்டை விளம்பரப்படுத்தும் வகையில் அந்தந்த நகரங்களில் உள்ள புராதன சின்னங்கள் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டை கல் புராதன சின்னத்தில் ஜி20 லேசர் ஒளி வெள்ளம் ஒளிரூட்டப்பட்டதில் மிளிர்கிறது.

    இந்த காட்சியை அந்த வழியாக சென்ற பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தங்கள் செல்போனில் படம் பிடித்து தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×