என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு வாரத்தில் ஓ.பி.எஸ்.சிடம் வந்து விடுவர்- வைத்திலிங்கம் எம்.எல்.ஏ பேட்டி
- கூட்டு தலைமையாக இருந்தால்தான் இயக்கம் வலுவாக இருக்க முடியும்.
- வலுவான இயக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி தினகரன், சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்துக்கு இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், துணை ஒருங்கிணை–ப்பாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் கட்டிக் காத்த இயக்கத்தை சுயநலத்திற்காக ஒருவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை ஏற்க முடியாது.
எடப்பாடி பழனிச்சாமி செய்த சூழ்ச்சிகள், வஞ்சகத்தை வெளிப்படுத்தாமல் அ.தி.மு.க.வை வலுவான இயக்கமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த அறிக்கையை மக்களும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு வாரத்தில் எங்களை நோக்கி வந்து விடுவார்கள். ஒற்றை தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
கூட்டு தலைமையாக இருந்தால்தான் இயக்கம் வலுவாக இருக்க முடியும். அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திருடி சென்றதாக கூறும் பட்டியலை அவர்களால் கூற முடியுமா?
மேல்முறையீட்டுக்கு சென்று இருக்கிறார் ஈ.பி.எஸ். அதை நாங்கள் சந்திப்போம். கட்சிக்காக உழைத்தவர்கள் என அனைவரும் ஒன்றாக, வலுவான இயக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி தினகரன், சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வராமல் போனால் போகட்டும். தொண்டர்கள் தற்போது
ஓ.பன்னீர்செல்வத்தை தேடி வருகிறார்கள். மற்ற கட்சிகளை அ.தி.மு.க விவகாரத்தில் இணைத்து பேசாதீர்கள். இது உள்கட்சி பிரச்சனை.
மற்ற கட்சிகள் இதில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.