என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரசியல் காழ்ப்புணர்ச்சி பார்க்காமல் குடிமராமத்து போன்ற நல்ல திட்டங்களை அரசு தொடர வேண்டும் - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
- சூறைக்காற்றினால் சுமார் 300 ஏக்கரில் பயிரிட்டு இருந்த மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.
- ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி பகுதியில் கடந்த சில தினங்களாக வீசிய சூறைக்காற்றினால் சுமார் 300 ஏக்கரில் பயிரிட்டு இருந்த மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் சேதமடைந்த பயிர்களை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ மற்றும் வேளாண்மை துறை அதி காரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியா ளர்களிடம் கூறியதாவது:- சூறைக் காற்றினால் மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு குறித்து வேளாண் மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். 100 ஹெக்டர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து ள்ளனர்.
பாதிப்பு குறித்து அரசு ஆய்வு செய்து விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். அதற்கு ஏற்ப அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் பருத்தியில் தண்டுப்புழு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதையும் அரசு கணக்கீட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.
மழைநீரை சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக தான் அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திட்டம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்தினை மீண்டும் அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
குடிமரமாத்து திட்டம் மூலமாக நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதால் அரசியல் காழ்ப்புணர்சி பார்க்கமால் குடிமராமத்து திட்டம் போன்ற நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு தொடரவேண்டும், மக்காச்சோளத்திலும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது மட்டுமின்றி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்க முதல்-அமைச்சர் அலுவலகம் வரை எடுத்து சென்று வழிவகை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.