search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புவனகிரி பகுதியில்  குட்கா பதுக்கி வைத்திருந்த வீடு, கடைக்கு சீல்போலீசார் அதிரடி
    X

    போலீசாரால் குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்ட காட்சி.

    புவனகிரி பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த வீடு, கடைக்கு சீல்போலீசார் அதிரடி

    • போலீசாருக்கு அதிக அளவில் ரோந்து மற்றும் சோதனைகளை தீவிரபடுத்த உத்தரவிடப்பட்டது.
    • குடோனில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மறைத்து வைத்து இருந்தது போலீசா ரல் கண்டுபிடிக்கப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரத்தில் போலீசார் சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து விசாரணை நடத்தியபோது அதில் அவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. பின்னர் அவரிடமி ருந்து 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அதிகாரிகள் மூலம் சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசாருக்கு அதிக அளவில் ரோந்து மற்றும் சோதனைகளை தீவிரபடுத்த உத்தரவிடப்ப ட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சீனுவாசன் என்பவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமா ன குடோனில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மறைத்து வைத்து இருந்தது போலீசா ரல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரி களின் முன்னிலையில் அதை பதுக்கி வைத்திருந்த வீடு மற்றும் கடைக்கு சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    Next Story
    ×