search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு, மேட்டூர் சுற்றுலா தலங்களில் கடும் பனி மூட்டம்
    X

    ஏற்காடு, மேட்டூர் சுற்றுலா தலங்களில் கடும் பனி மூட்டம்

    • தமிழகத்தில் தட்ப வெப்ப மாற்றம் ஏற்பட்டு, வானில் மேகக் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • இரவிலும் பனி நிலவுகிறது. இதனால் மக்கள் குளிரை தாங்க முடியாமல் திணறுகின்றனர்.

    சேலம்:

    தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் தட்ப வெப்ப மாற்றம் ஏற்பட்டு, வானில் மேகக் கூட்டம் அதிகரித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் பகலில் வெயில் தாக்கம் குறைவா–கவும், குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    இரவிலும் பனி நிலவுகிறது. இதனால் மக்கள் குளிரை தாங்க முடியாமல் திணறுகின்றனர். நேற்று மாலையில் சேலத்தின் சில இடங்களில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

    கடும் குளிர்

    இன்று காலையிலும் பனி மூட்டம் நிலவியது. குறிப்பாக சுற்றுலா தலங்க–ளான ஏற்காடு படகு இல்லம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயிண்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி, தாவரவியல் பூங்கா, ஏற்காடு அடிவாரம், சேர்வ ராயன் மலை, வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அடிவாரம், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, ஆத்தூர் அருகே கல்வராயன்மலை தொடர்ச்சியில் உள்ள முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி, மேட்டூர், ெகாளத்தூர் மலைபகுதிகளில் அதிக அளவில் பனி நிலவியது.

    இங்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயனாளிகள் இந்த குளிரை தாங்க முடியாமல் அவதிப்பட்டனர். எனினும் நடுங்க வைக்கும் குளிரில் மலையில் படர்ந்திருந்த மேக கூட்டத்தை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த பனி மூட்டதால், மலை பகுதிகளில் உள்ள சாலைகள் தெளிவாக காண முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.

    Next Story
    ×