search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபத் போராட்டம் எதிரொலி- நெல்லை  ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

     நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.

    அக்னிபத் போராட்டம் எதிரொலி- நெல்லை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • மத்திய அரசின் அக்னிபத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு.
    • ஒவ்வொரு தண்டவாளத்துக்கும் 2 போலீஸ்காரர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு

    நெல்லை:

    மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.இந்த திட்டத்தின் மூலம் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

    மத்திய அரசின் இந்த அக்னிபத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டம் தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் இன்று ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு தண்டவாளத்துக்கும் 2 போலீஸ்காரர்கள் என 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ரெயில்வே மேம்பாலங்கள், தண்டவாளங்கள் உள்ளிட்ட இடங்களில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ரெயில் நிலையங்களில் போராட்டத்திற்கு நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மாநகர போலீசாரும் சந்திப்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×