என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக உதவி மையம் தொடக்கம்
- 22 பெண் சுகாதார தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- மக்களை தேடி மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்காக உதவி மையத்தை மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மாநகர்நல அலுவலர் டாக்டர். சுபாஷ்காந்தி, மண்டல குழு தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கவுன்சி லர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர் மற்றும் 22 பெண் சுகாதார தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் தொற்றா நோய் பிரிவு செவிலியர்கள், ஆய்வக நுட்புணர்கள் மற்றும் 22 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியின் இந்த மக்களை தேடி மருத்துவ உதவி மையத்தை 78458 49867 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






