search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மேம்பாலம் பணி நடைபெறும் பகுதியில்  விபத்துகளை தடுக்க  நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி.

    தூத்துக்குடி மேம்பாலம் பணி நடைபெறும் பகுதியில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை

    • தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில்உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • துறைமுக பைபாஸ் சாலை முழுவதும் மின் விளக்குகளே இல்லாமல் இருந்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வக்கீல் சுடலை யாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் துறைமுகம் மதுரை பைபாஸ் -உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நடைபெற்று வருகிறது. இந்த சாலை வழியாக தினசரி ஆயிரக்க ணக்கான லாரிகள் , பஸ்களும், இருசக்கர வாகனங்களும் பயணம் செய்து வருகின்றது.

    ஆனால் அப்பகுதியில் முறையற்ற வாகன பயணம் மேற்கொள்ளப் படுவதாலும், மழைநீர் தேங்கி சாலைகள் ஒரு அடிக்கு மேலும் மிகப்பெரிய கிடங்குகள் ஏற்பட்டு இருப்பதாலும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன ர்.

    இதில் குறிப்பாக சமீபத்தில் மட்டும் இளைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பாலம் பணி நடைபெறக்கூடிய பகுதி மட்டுமல்லாமல் துறைமுக பைபாஸ் சாலை முழுவதும் மின் விளக்குகளே இல்லாமல் இருந்து வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உரிய கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கை எடுத்து விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பழையகாயல் அருகே கோவங்காடு விலக்கு மதிகெட்டான் ஓடை பகுதியில் தொடர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்தப் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து விபத்துகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×