என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம்
- 30 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர், முருகன், சிவன் கோவில்கள் உள்ளது.
- போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
குனியமுத்தூர்,
கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்- 1 விரிவு பகுதியில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர், முருகன், சிவன் கோவில்கள் உள்ளது. இந்த நிலையில் கோவிலை அகற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
2017-ல் கோவிலை அகற்ற, கோர்ட் வீட்டுவசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. வீட்டு வசதி வாரிய கோவை பிரிவின் செயற்பொறியாளர், கோவிலின் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் இன்று கோவில், போலீஸ், வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து கோவிலை இடித்து அகற்ற அதிகாரிகள் இன்று காலை வந்தனர். இந்த தகவலை அறிந்த அந்த பகுதியினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் அங்கு வந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டது.
அவர்கள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவத்து கோஷங்களை எழுப்பினர். அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் கோவிலை இடிக்க விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.